ஏலச்சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடி
ஏலச்சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடியில் தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் மோகலிங்கம் நகர் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்த ராபியா (வயது 49), அவருடைய மகன் சபீர் அக்தர் அகமது (26) மற்றும் பக்ரூதீன் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகினர். அவர்களிடம் பணம் கட்டி ஏமாந்த குன்றத்தூர் புதுநெல்லூர் 3-வது தெருவைச் சேர்ந்த அலமேலு (32) உள்பட 29 பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மயிலாடுதுறை மாவட்டம் தாத்தான்குடி கிராமத்தில் தங்கி இருந்த ராபியா மற்றும் அவருடைய மகன் சபீர் அக்தர் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பக்ரூதீனை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story