காஞ்சீபுரம் குருவிமலை பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் இரு பிரிவினரிடையே மோதல்


காஞ்சீபுரம் குருவிமலை பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் இரு பிரிவினரிடையே மோதல்
x
தினத்தந்தி 20 Dec 2021 2:36 PM GMT (Updated: 20 Dec 2021 2:36 PM GMT)

காஞ்சீபுரம் குருவிமலை பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் இரு பிரிவினரிடையே மோதல் தொடர்பாக சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இரு பிரிவாக திருநங்கைகள்

காஞ்சீபுரம் நகர பகுதியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் திருநங்கை தனம் தலைமையில் ஒரு பிரிவினரும் சங்கீதா தலைமையில் ஒரு பிரிவினரும் செயல்பட்டு வந்தனர். இவர்களுக்கு காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட குருவி மலைப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் யாரும் வசிக்காமல் தனித்தனியாக ஆங்காங்கே வசித்து வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் தனம் பிரிவை சேர்ந்த திருநங்கைகள் மீது சங்கீதா தலைமையிலான திருநங்கைகள் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்து 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காஞ்சீபுரம் - உத்திரமேரூர் சாலை ஓரிக்கை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஓரிக்கை கூட்டு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் குறித்து தகவலறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் தனம் தலைமையிலான திருநங்கைகள் கலைந்து சென்றனர்.


Next Story