காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2021 12:28 PM GMT (Updated: 27 Dec 2021 12:28 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு காஞ்சீபுரம் கலெக்டர் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

ஆகவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் நெல் II, தமிழ்நாடு பண்ணை நிலங்களை பசுமையிக்கும் திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகள், ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் பரப்பளவு - பட்டா போன்றவறறின் நகல்கள், பாஸ்போட் சைஸ் புகைப்படம் - 1, இணையவழி சிறு, குறு விவசாய சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. கூட்டம் நடைபெறும் அன்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆதார் அட்டை நகலை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story