மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி


மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 30 Dec 2021 6:20 PM IST (Updated: 30 Dec 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கணவர் கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

சாவு

பூந்தமல்லி கன்டோன்மென்ட் சின்ன மசூதி தெருவை சேர்ந்தவர் சையத் உஸ்மான் (வயது 62). இவரது மனைவி பசிலத் நிஷா (58). இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

குமணன்சாவடி - குன்றத்தூர் சாலை, மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அருகே வந்த லாரி, மோட்டர் சைக்கிள் மீது உரசியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பசிலத் நிஷா லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார்.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பசிலத் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்தில் அவரது கணவர் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

1 More update

Next Story