ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய குழுவினர் ஆய்வு

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய குழுவினர் ஆய்வு
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசி இருப்பு மற்றும் மருத்துவ கட்டமைப்புகள் குறித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தனிமைப்படுத்தப்பட்ட வார்டு
மத்திய குழுவை சேர்ந்த டாக்டர்கள் வினிதா, பிரபா, சந்தோஷ், தினேஷ்பாபு ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, ஆர்.டி.பி.சி.ஆர்.பரிசோதனை கூடம் போன்றவற்றையும் நேரில் பார்வையிட்டனர்.
முன்னதாக மத்திய குழுவினரை காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சித்ரசேனா, அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story






