செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
x
தினத்தந்தி 4 Jan 2022 3:50 PM IST (Updated: 4 Jan 2022 3:50 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார டாக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

கொரோனா தடுப்பூசி

இதில் தி.மு.க. நகர பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ‌. வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சபாபதி, அரசு டாக்டர்கள், முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேல்மருவத்தூர்

இதே போல் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு சித்தாமூர் வட்டார டாக்டர் அருண்குமார் தலைமையில் தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக சோத்துபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் கலந்துக்கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.

மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமுதம் ரமேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணகிரி, அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், நர்சுகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாம்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, காஞ்சீபுரம் மாவட்ட சேர்மன் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story