மாவட்ட செய்திகள்

சிறப்பு தற்காலிக பஸ்நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு + "||" + Chengalpattu District Collector inspects special temporary bus stand

சிறப்பு தற்காலிக பஸ்நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

சிறப்பு தற்காலிக பஸ்நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தற்காலிக பஸ்நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தற்காலிக பஸ்நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களையும் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டருடன் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுடைநம்பி, வண்டலூர் வருவாய் தாசில்தார் ஆறுமுகம், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து சிறப்பு பஸ்களும் நின்று செல்வதால் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பஸ்சில் ஏறி சென்றனர்.