பெண்ணை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு


பெண்ணை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Jan 2022 7:10 PM GMT (Updated: 26 Jan 2022 7:10 PM GMT)

பெண்ணை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு

திருச்சி, ஜன.27-
திருச்சி தென்னூரை சேர்ந்த 42 வயது பெண் தனது மகனுடன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பருடன் அங்கு வந்த தென்னூர் புதுமாரியம்மன் கோவில் மேட்டு வீதியைச்சேர்ந்த தேவா (வயது 24), தனது சகோதரர் மோகன் மீது கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த போக்சோ வழக்கை வாபஸ் பெறும்படி கூறி அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். மேலும் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவா உள்ளிட்ட 2 பேர் மீதும் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story