தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் ேமாதி வாலிபர் பலி


தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் ேமாதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 27 Jan 2022 9:13 PM GMT (Updated: 27 Jan 2022 9:13 PM GMT)

கொட்டாம்பட்டி பிரிவு அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

கொட்டாம்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சையது அலி. இவருடைய மகன் காதர்மீரான் (வயது 30). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊரான காயல்பட்டினத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு உள்ளார். கொட்டாம்பட்டி பிரிவு அருகே நான்கு வழி சாலையில் வந்த போது நிலைதடுமாறி சாலையோர இரும்பு தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  இது குறித்து தகவல் அறிந்ததும் கொட்டாம்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story