காஞ்சீபுரத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு


காஞ்சீபுரத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2022 5:50 PM IST (Updated: 4 Feb 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அண்ணா நினைவுதினம்

முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட கழக பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் உள்பட திரளானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் முத்தியால்பேட்டையில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தி.மு.க.

தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில், மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், காஞ்சீபுரம் எம்.பி. சிறுவேடல் செல்வம், வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம், முன்னாள் திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரி க.மோகனசுந்தரம் உள்பட திரளானோர் மாலை அணிவித்து வணங்கினார்கள். ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் பலர் மாலை அணிவித்து வணங்கினார்கள்.

1 More update

Next Story