செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 6:46 PM IST (Updated: 21 Feb 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீசார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பத்திரமாக வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்

தாம்பரம் மாநகராட்சி- மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி, குரோம்பேட்டை.

செங்கல்பட்டு நகராட்சி- செங்கல்பட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளி.

மதுராந்தகம் நகராட்சி- மதுராந்தகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி.

மறைமலைநகர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி- காட்டாங்கொளத்தூரில் உள்ள உயர்நிலைப்பள்ளி.

அச்சரப்பாக்கம், கருங்குழி பேருராட்சிகள்- அச்சரப்பாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி.

இடைக்கழிநாடு பேரூராட்சி- கடப்பாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி.

மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பேரூராட்சிகள்- திருக்கழுக்குன்றத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி.


Next Story