கூவத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை


கூவத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 Feb 2022 6:09 PM IST (Updated: 22 Feb 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

கூவத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

நகை - பணம் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரை சேர்ந்தவர் பரசுராம். வடமாநிலத்தை சேர்ந்தவர். கூவத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவின் மேல் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே இருந்த 5 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1,500-ஐ கொள்ளையடித்து சென்றனர்.

போலீசார் விசாரணை

அதை தொடர்ந்து அருகில் இருந்த ஓட்டல் மற்றும் முடி திருத்தும் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்

இது குறித்து கூவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story