பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 27 Feb 2022 10:30 PM IST (Updated: 27 Feb 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

பழனி: 

வார விடுமுறையையொட்டி, பழனி முருகன் கோவிலுக்கு இன்று பக்தர்களின் வருகை அதிகரித்தது. அதிகாலை முதலே பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பிரதான பாதையான படிப்பாதையில் பக்தர்கள் கூட்டத்தை அதிகம் காண முடிந்தது.

 இதேபோல் இதர வழிகளான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர். பக்தர்கள் குவிந்ததால் மலைக்கோவிலில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று  பகல் முழுவதும் கடும் வெயில் இருந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். எனவே பக்தர்கள் நலனுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டு அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.


Next Story