சென்னை விமான நிலையத்தில் ரூ.40½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து ரூ.40 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 880 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது வேலூர் ஹைதர்புரத்தை சேர்ந்த இளம்பெண் சக்தி ஜெய்கிருஷ்ணன் (வயது 27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித் தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
ரூ.40½ லட்சம் தங்கம்
அதில் இருந்த உள்ளாடைக்குள் அவர் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 880 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சக்தி கடத்தி வந்த தங்கத்தை, வாங்கி செல்ல விமான நிலையத்தின் வெளியே ஒருவர் காத்திருப்பதும் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தெரியவந்தது. கடத்தல் தங்கத்தை வாங்க வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த நாகூர் கனி (30) என்பவரையும் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து பெண் உள்பட 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story