பொன்னேரி அருகே கட்டிட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி


பொன்னேரி அருகே கட்டிட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 March 2022 6:30 PM IST (Updated: 4 March 2022 6:30 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே கட்டிட பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

தவறி விழுந்தார்

பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில் தனியார் ஒருவர் வீடு கட்டும் பணியை செய்து வருகிறார். இதில் பனப்பாக்கம் மேட்டுகாலனியை சேர்ந்த நாகலிங்கம் (வயது 55) கட்டிட பணியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் கட்டிடப்பணியின்போது ஏணியில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.

சாவு

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story