ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு


ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 27 March 2022 7:48 PM IST (Updated: 27 March 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவரது உறவினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 40). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி எழிலரசி. இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று லட்சுமிநாராயணனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவரது உறவினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது வீட்டில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, கதவை இரும்பு கம்பியால் உடைத்து, உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. போலீசார் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.


Next Story