படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை
படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக்கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தேவா என்கிற தேவேந்திரன்(வயது 23). இவரை நேற்று காலை முதல் காணவில்லை என தேடி பார்த்துள்ளனர்.
பின்னர் சாப்பிடுவதற்கு கூட வரவில்லையே என அவரது பெற்றோர்கள் வீட்டின் மாடியில் சென்று பார்த்தனர். அப்போது. வீட்டின் மாடியில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தேவேந்திரன் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தேவேந்திரனின் பெற்றோர் அவரது உறவினர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.
2 தனிப்படை
தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் தேவேந்திரனை வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கலாம் எனவும் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டின் மாடியில் கொலை சம்பவம் நடந்துள்ளது மணிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story