நாய் கடித்து குதறியதில் புள்ளி மான் சாவு
நாய் கடித்து குதறியதில் புள்ளி மான் பரிதாபமாக இறந்தது.
பொன்னேரி அடுத்த ஆலாடு லட்சுமிபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தின் அருகே குளம் ஒன்று உள்ளது. இங்கு தண்ணீர் அருந்துவதற்காக புள்ளிமான் ஒன்று வந்துள்ளது.
அப்போது மானை சூழ்ந்துக்கொண்ட நாய்கள் மானை கடித்து குதறி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வனத்துறை அலுவலர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் வன அலுவலர் கல்யாண் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கிடந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி கும்மிடிப்பூண்டி வனச்சரக அலுவலர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story