பொன்னேரியில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை


பொன்னேரியில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 April 2022 8:24 PM IST (Updated: 7 April 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

பொன்னேரி நீலிஅப்பாதுரை தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 78). இவரது மனைவி ஜெயலட்சுமி. 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததையடுத்து கந்தசாமி தன்னுடைய மகன் வீட்டில் இருந்து வந்தார். மனைவி இறந்த சோகத்தால் அடிக்கடி உறவினர்களிடம் புலம்பி வந்தார். மேலும் மனைவி புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு மனவேதனை அடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டில் 2-வது மாடிக்கு சென்றார். பின்னர் மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி உயிருக்கு போராடி வந்த நிலையில் அவரை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story