போரூர் பகுதிகளில் மின்சார திருட்டு கண்டுபிடிப்பு; மின்சார வாரியம் நடவடிக்கை


போரூர் பகுதிகளில் மின்சார திருட்டு கண்டுபிடிப்பு; மின்சார வாரியம் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 April 2022 5:51 PM IST (Updated: 8 April 2022 5:51 PM IST)
t-max-icont-min-icon

போரூர் பகுதிகளில் மின்சார திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு மின்சார நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 9 மின்சார திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 331 இழப்பீட்டு தொகையாக மின்சார நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட மின்சார நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின்சார திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர் செல்போன் எண் 94458-57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story