காதல் ஜோடியை மிரட்டிய 10 பேர் மீது வழக்கு


காதல் ஜோடியை மிரட்டிய 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:47 PM GMT)

காதல் ஜோடியை 10 பேர் கும்பல் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பேரில் அவர்களை மிரட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மங்களூரு:

காதல் ஜோடியை 10 பேர் கும்பல் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பேரில் அவர்களை மிரட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

காதல் ஜோடி

சிவமொக்கா மாவட்டம் ஆகும்பே பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இளம்பெண்ணும், அவரது காதலனும் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், அந்த இளம் காதல் ஜோடியை மிரட்டினர். மேலும் அவர்களை மிரட்டும் போது செல்போனில் வீடியோவும் எடுத்துக் கொண்டனர்.

அதையடுத்து அவர்களை அந்த கும்பல் ஆகும்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் உடுப்பி மாவட்டம் காபு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. அதையடுத்து அந்த காதல் ஜோடியின் பெற்றோரை போலீசார் நேரில் வரவழைத்தனர்.

10 பேர் மீது வழக்கு

பின்னர் அவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர் இதற்கிடையே அந்த இளம் காதல் ஜோடியை, 10 பேர் கும்பல் மிரட்டுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த இளம்பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து இளம்பெண்ணின் சகோதரர், இதுபற்றி காபு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், காதல் ஜோடியை மிரட்டிய 10 பேர் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story