மேற்கு வங்கம்: பிக்கப் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்கப் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்ததனர்.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் அருகே பிக்கப் வேனில் சுமார் 27 பேர் நேற்று இரவு பயணித்துள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்றனர். அங்கு வேனில் இருந்த 27 பேரில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பயணிகள் அனைவரும் சிட்டல்குச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் வேனில் இருந்த ஜெனரேட்டரின் (டிஜே சிஸ்டம்) வயரிங்கில் இருந்து மின் கசிந்ததால் விபத்து நடைபெற்றதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் அவர்கள் சங்ரபந்தா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 10 உயிரிழந்ததவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,அமித் வர்மா தெரிவித்துள்ளார்.
வேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிய நிலையில் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.