அனுமன் பிறந்த இடத்தை மேம்படுத்த ரூ.100 கோடி: கர்நாடக காங். அரசு அறிவிப்பு


அனுமன் பிறந்த இடத்தை மேம்படுத்த ரூ.100 கோடி:  கர்நாடக காங். அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2024 4:40 PM IST (Updated: 16 Feb 2024 4:51 PM IST)
t-max-icont-min-icon

அனுமன் பிறந்த இடமாக கருதப்படும் அஞ்சனாத்திரி மலை சர்வதேச தரத்திற்கு மாற்றப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.

பெங்களூர்,

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலையில்தான் இந்து கடவுள் அனுமன் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி நாட்களில் பக்தர்கள் பலரும் அஞ்சனாத்திரி மலைக்கு பாதயாத்திரை வருவார்கள். கர்நாடகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் அஞ்சனாத்திரி மலை உள்ளது.

கடந்த பா.ஜனதா ஆட்சியில் ரூ.100 கோடி செலவில் அஞ்சனாத்திரி மலையில் ரோப் கார் உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளும் தொடங்கின. இதற்கிடையே கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்தநிலையில் புதிதாக பதவி ஏற்ற காங்கிரஸ் அரசும் அஞ்சனாத்திரி மலையில் சுற்றுலா வசதிகள் செய்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-

அனுமன் பிறந்த இடமாக கருதப்படும் அஞ்சனாத்திரி மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.100 கோடி செலவில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும். அஞ்சனாத்திரி மலை பகுதி சர்வதேச தரத்திற்கு மாற்றப்படும் . இவ்வாறு சித்தராமையா கூறினார்.

1 More update

Next Story