100-க்கும் மேற்பட்டோரை நிஜாம் படை கொன்று குவித்த இடத்தில் 103 அடி உயர மூவர்ண கொடி; அமித்ஷா உரை


100-க்கும் மேற்பட்டோரை நிஜாம் படை கொன்று குவித்த இடத்தில் 103 அடி உயர மூவர்ண கொடி; அமித்ஷா உரை
x

அரசியல் சாசனத்தின்படி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கர்நாடகாவில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

பெங்களூரு,


கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவகம் ஒன்றை திறந்து வைத்தும், 103 அடி உயர தேசிய கொடி ஒன்றையும் ஏற்றி வைத்தும் உள்ளார்.

இதன்பின்னர், பிதார் நகரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார். அவர் கூறும்போது, கொரோட்டா கிராமத்தில் 2.5 அடி உயர மூவர்ண கொடியை ஏற்றியதற்காக, நிஜாம் படையினர் 100-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

இன்றைய தினம் நான் பெருமையுடன் கூறி கொள்கிறேன். அதே நிலத்தில், நாம் தற்போது 103 அடி உயர மூவர்ண கொடியை ஏற்றி உள்ளோம். அதனை ஒருவராலும் மறைக்க முடியாது என மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

இதேபோன்று இடஒதுக்கீடு பற்றி பேசிய அவர், அரசியல் சாசனத்தின்படி கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசியல் சாசனத்தில் எந்தவித பிரிவுகளும் இல்லை.

பிரித்து ஆளும் அரசியலுக்காக, ஓட்டு வங்கி அரசியலுக்காக பேராசைப்பட்டு, காங்கிரஸ் அரசு, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களை ஒருபோதும் நினைவுகூர்ந்ததில்லை.

அக்கட்சி பிரிவினையை உண்டாக்கும் அரசியலை மையப்படுத்தி, சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது. அந்த இடஒதுக்கீட்டை பா.ஜ.க. ஒழித்து உள்ளது. ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லையென்றால் ஐதராபாத் சுதந்திரம் பெற்று இருக்காது. பிதார் நகரமும் கூட சுதந்திரம் அடைந்திருக்காது என அவர் கூறியுள்ளார்.


Next Story