மழை, பனிப்பொழிவு காரணமாக இமாச்சலில் 104 சாலைகள் மூடல்


மழை, பனிப்பொழிவு காரணமாக இமாச்சலில் 104 சாலைகள் மூடல்
x

மணாலி-கீலாங் நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தில் சனிக்கிழமை அதிக அளவு மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக நடு மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் 104 சாலைகள் மற்றும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணாலி-கீலாங் நெடுஞ்சாலையில் சிசுவுக்கு அருகில் உள்ள செல்பி பாயின்ட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் உள்ள 99 சாலைகள் உட்பட 104 சாலைகள் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணிகளுக்காக எல்லை சாலைகள் அமைப்பு ஆட்களையும், இயந்திரங்களையும் அனுப்பியுள்ளது. அடுத்த இரண்டு, மூன்று மணி நேரத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் வருகிற 26-ந்தேதி வரை நடு மலைகளில் மழை பெய்யும் என்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 22, 23) இரண்டு நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story