பா.ஜனதா, காங்கிரஸ் என 2 கூட்டணியிலும் சேராத 11 அரசியல் கட்சிகள்..!!


பா.ஜனதா, காங்கிரஸ் என 2 கூட்டணியிலும் சேராத 11 அரசியல் கட்சிகள்..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 July 2023 4:57 AM IST (Updated: 20 July 2023 7:47 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா, காங்கிரஸ் என 2 கூட்டணிகளிலும் சேராமல் 11 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சிகளுக்கு 91 எம்.பி.க்கள் உள்ளனர்.

புதுடெல்லி,

பா.ஜனதா, காங்கிரஸ் என 2 கூட்டணிகளிலும் சேராமல் 11 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சிகளுக்கு 91 எம்.பி.க்கள் உள்ளனர்.

11 கட்சிகள் பட்டியல்

காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், 39 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, மொத்தம் 65 கட்சிகள், ஏதேனும் ஒரு அணியில் உள்ளன.

ஆனால், இரு கூட்டணிகளிலும் இணையாமல் 11 கட்சிகள் இருக்கின்றன. அந்த கட்சிகள் வருமாறு:-

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், பாரத ராஷ்டிர சமிதி, மதச்சார்பற்ற ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, தெலுங்கு தேசம், அகாலி தளம், அகாலிதளம் (மான்), ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி.

3 ஆளுங்கட்சிகள்

இந்த கட்சிகளில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், ஒடிசாவில் பிஜு ஜனதாதளமும் ஆளுங்கட்சியாக உள்ளன. 3 மாநிலங்களிலும் மொத்தம் 63 மக்களவை தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செல்வாக்கு இழந்துள்ளன.

இவற்றில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் ஆகியவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

91 எம்.பி.க்கள்

சில மாதங்களுக்கு முன்புவரை, பா.ஜனதாவுக்கு எதிராக மாற்று அணி அமைக்க பாரத ராஷ்டிர சமிதி முயன்று வந்தது. தற்போது, அம்முயற்சியை கைவிட்டதுடன், எதிர்க்கட்சி கூட்டணியிலும் சேரவில்லை. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 9 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்ற, 4 மாநில சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட போவதாக அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி., தனது கட்சியை தீண்டத்தகாத கட்சியாக கருதி, எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.

மேற்கண்ட 11 கட்சிகளிலும் மொத்தம் 91 எம்.பி.க்கள் உள்ளனர். இப்போதைக்கு நடுநிலை வகிக்க அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.


Next Story