கேரளாவில் காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு சிகிச்சை - பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை


கேரளாவில் காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு சிகிச்சை - பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
x

பொதுமக்கள் அடுத்த சில தினங்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான காய்ச்சல் பாதிப்புகள் பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் கேரளாவில் 11,813 பேர் பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 150 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 6 பேர் காய்ச்சல் பாதிப்பால் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே பொதுமக்கள் அடுத்த சில தினங்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த அடுத்த மூன்று நாட்களை உலர் நாட்களாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.




Next Story