சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்பு


சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்பு
x

சூடானில் இருந்து 135 இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன.

இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்களும் மீட்பு பணிக்காக சென்று உள்ளன. இதனை தொடர்ந்து, ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், இந்த மீட்பு பணியில் இண்டிகோ விமான நிறுவனமும் இணைந்து உள்ளது. இதன்படி, விமானத்தில் 231 இந்தியர்கள் நேற்று சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் மற்றொரு சி-130 ஜே ரக விமானத்தின் மூலம் சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




Next Story