ராஜஸ்தானில் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 15 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
தப்பி ஓடிய இளம் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் ஒரு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான இளம் குற்றவாளி சிறார்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று காலை இந்த சிறார் முகாமில் இருந்து பலர் தப்பி ஓடியதாக தெரியவந்தது. சோதனையிட்டபோது 15 இளம்சிறார்கள் மாயமாகி இருந்தனர். அங்குள்ள கழிவுநீர் வெளியேறும் துவாரம் அருகே சுவரை உடைத்து அவர்கள் தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், தப்பி ஓடிய இளம் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story