அமர்நாத் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு


அமர்நாத் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 July 2022 9:44 PM IST (Updated: 8 July 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட இடத்தில் குறுகிய நேரத்தில் மிக கனமழை கொட்டுவது மேக வெடிப்பு என்று கூறப்படுகிறது.

அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன.

மேக வெடிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் போலீசார் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் வான்வழியாக மீட்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story