ஐதராபாத் விமான நிலையத்தில் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சூடானில் இருந்து வந்த 4 பெண்கள் கைது


ஐதராபாத் விமான நிலையத்தில் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சூடானில் இருந்து வந்த 4 பெண்கள் கைது
x

மொத்தம் 14 கிலோ 415 கிராம் எடை கொண்ட சுமார் 7.9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சூடான் நாட்டில் இருந்து ஒரே குழுவாக வந்த 23 பெண்களின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கடத்தல் தங்கம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த ஷூக்களின் அடிப்பாகம், ஆடைகளின் உள்பக்கம் உள்ளிட்ட இடங்களில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தையும் மொத்தமாக பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த கடத்தல் தொடர்பாக 4 பெண்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம் 14 கிலோ 415 கிராம் எடை கொண்ட சுமார் 7.9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story