பெங்களூருவில் நடந்த வேளாண் கண்காட்சியை 15 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்


பெங்களூருவில் நடந்த வேளாண் கண்காட்சியை 15 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்
x

பெங்களூருவில் 4 நாட்கள் நடைபெற்ற வேளாண் கண்காட்சி நிறைவு பெற்றது. 15 லட்சம் பேர் இந்த கண்காட்சியை கண்டு ரசித்திருந்தனர்.

பெங்களூரு:

வேளாண் கண்காட்சி

பெங்களூரு ஹெப்பாலில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் கடந்த 3-ந் தேதி வேளாண் கண்காட்சி மற்றும் மாநாடு தொடங்கி இருந்தது. இந்த கண்காட்சியை கவர்னர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி இருந்தார். நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள் கண்காட்சியில் கலந்துகொண்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விவசாய பொருட்களை அவர் பார்வையிட்டார். விவசாயிகளிடமும் குறைகளை கேட்டு அறிந்தார்.

இந்த வேளாண் கண்காட்சியில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு இருந்தனர். விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகள், மாடுகள், கோழிகள் மற்றும் உணவு தானியங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். விவசாயிகள் கொண்டு வந்திருந்த ஆடு, கோழிகள் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி இருந்தது. சில மாடுகளை பல லட்சம் ரூபாய் கொடுத்தும் மக்களும், பிற விவசாயிகளும் வாங்கி சென்றனர்.

கொரோனாவுக்கு பிறகு..

கடந்த 3-ந் தேதி தொடங்கிய கண்காட்சியை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்திருந்தனர். 2-வது நாள் 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்க்க வருகை வந்திருந்தனர். நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7 லட்சத்து 16 ஆயிரம் விவசாய கண்காட்சியை பார்க்க வந்திருந்தனர். அத்துடன் ரூ.2.85 கோடிக்கு விற்பனையும் நடைபெற்றிருந்தது.

கொரோனாவுக்கு பின்பு இந்த ஆண்டு வேளாண் கண்காட்சிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

15 லட்சம் பேர் பார்த்தனர்

இந்த நிலையில், கடைசி நாளான நேற்றும் பல லட்சம் மக்கள், விவசாயிகள் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்திருந்தனர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த நவீன விதமான விவசாய பொருட்கள், பல்வேறு வகைகளை சேர்ந்த கால்நடைகளையும் மக்கள் பார்த்து ரசித்தார்கள். கண்காட்சிக்கு வந்திருந்த மக்ககள் விவசாய பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றதையும் பார்க்க முடிந்தது. மொத்தம் 4 நாட்கள் நடந்த வேளாண் கண்காட்சியை 15 லட்சம் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் ரூ.6½ கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

குறிப்பாக கண்காட்சி நடைபெற்ற பகுதியில் சூரிய காந்தி பூக்கள் பூத்திருந்தது. அந்த பூக்களுக்கு முன்பாக நின்று இளம்பெண்கள், இளைஞர்கள் ஆர்முடன் செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர். பெங்களூருவில் கடந்த 4 நாட்களாக நடைபெற் வேளாண் கண்காட்சி மற்றும் மாநாடு நேற்று நிறைவு பெற்றது.


Next Story