பீகார்: மின்னல் தாக்கி 15 பேர் பலி
பீகாரில் மின்னல் தாக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா,
நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல், வீடுகள், மருத்துவமனை என பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், பீகாரில் மின்னல் தாக்கி நேற்று முதல் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழை இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
Related Tags :
Next Story