தோழியை "விருந்தாக்கிய" தோழி...! விடிய விடிய நகரை சுற்றிய கார்...! 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்...!
ஓடும் காரில் மாடல் அழகி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் நடிகையை பலாத்காரம் செய்ததாக கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகர் திலீப்பும் கைதானார்.
இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கொச்சி பகுதியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-
காசர்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கொச்சி, காக்கநாடு பகுதியில் தங்கி இருந்து மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது அந்த மாடல் அழகி, உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கொச்சி இன்போபார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண்.மாடல் அழகியாக உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த தோழி இவருக்கு மிகவும் நெருக்கமானவர்.
ராஜஸ்தான் பெண் மாடல் அழகியை கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 ஆண் நண்பர்களும் அந்த பார்ட்டிக்கு வந்துள்ளாரகள்.
மாடல் அழகி தோழிக்கும் அந்த 3 நண்பர்களையும் ஏற்கனவே அறிமுகம் உண்டு.எஎல்லாரும் சேர்ந்து பார்ட்டியில் மது அருந்தி உள்ளனர். மாடல் அழகி ஒருகட்டத்துக்கு மேல் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். அதனால், அவரை வீட்டில் கொண்டுவிடுவதாக சொல்லி, அனைவரும் முன்வந்துள்ளனர். 3 இளைஞர்களும், ஒரு வாகனத்தில் அழகியை ஏற்றிவிடவும், அந்த ராஜஸ்தான் பெண், அவர்களுடன் செல்லாமல் வேண்டுமென்றே அந்த ஓட்டலிலேயே இருந்துவிட்டார்.
காரில் 3 பேரும் கொச்சி நகரில் பல இடங்களில், விடிய விடிய சுற்றிக் கொண்டே இருந்தனர். மாடல் அழகியை ஓடும் காரிலேயே அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
வழியில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அழகியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பிறகு, மறுபடியும் ஓட்டலுக்கு சென்ற இளைஞர்கள், அங்கிருந்த, ராஜஸ்தான் தோழியையும் அதே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காக்கநாடுவுக்கு சென்று அவரது வீட்டு அருகே விட்டு விட்டு சென்றனர்.மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர், அங்கு சென்று பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து போலீசார் மாடல் அழகியை மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாடல் அழகியை கடத்தி சென்ற காரை கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து மாடல் அழகியின் 3 நண்பர்கள், அவரது தோழி ஆகியோரையும் பிடித்தனர். இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.