சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது


சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது
x
தினத்தந்தி 23 July 2023 4:06 PM IST (Updated: 23 July 2023 4:12 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாட்னா,,

பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள ரக்சவுலில் இருந்து இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இரண்டு சீனர்களைக் கைது செய்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய கிழக்கு சம்பரான் காவல்துறை கண்காணிப்பாளர் காந்தேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில்,

'' சீனாவின் கிழக்கில் உள்ள ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜாவோ ஜிங் மற்றும் எப்யூ காங். இருவரும் நேற்று இரவு இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றதால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தியாவுக்குள் வருவதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் நுழைய முயன்றதன் நோக்கம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரி கூறுகையில், விசாரணையின் போது, அவர்கள் சந்தேகப்படும்படியான நடத்தையை வெளிப்படுத்தினர். அவர்களில் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தாலும், அவர்கள் அளித்த தகவல் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி,

கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. அவர்கள் இதற்கு முன்பு கடந்த 2ஆம் தேதி ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அந்த நேரத்தில், அவர்கள் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர் . மேலும் விசாவுடன் இந்திய எல்லைக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story