மத வழிபாட்டு தளத்தின் மேற்கூரை இடிந்து விபத்து ; வழிபாடு செய்துகொண்டிருந்த 2 பேர் பலி


மத வழிபாட்டு தளத்தின் மேற்கூரை இடிந்து விபத்து ; வழிபாடு செய்துகொண்டிருந்த 2 பேர் பலி
x

மத வழிபாட்டு தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வழிபாடு செய்துகொண்டிருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் ஜுடா என்ற கிராமத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளம் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டு தளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் இஸ்லாமிய மதத்தினர் பலர் பங்கேற்றனர்.

அப்போது, வழிபாட்டு தளத்தின் மேற்கூரை தீடிரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களில் முலிம் கான்(45), இஷ்ஹட் (32) ஆகிய 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கிய 7 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மத வழிபாட்டு தளம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story