ஆயுதப் பயிற்சிக்காக டெல்லியில் இருந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்ட 2 பேர் கைது


ஆயுதப் பயிற்சிக்காக டெல்லியில் இருந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்ட 2 பேர் கைது
x

டெல்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு ஆயுதப் பயிற்சிக்காக திட்டமிட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து ஆயுதப் பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டதாகக் கூறப்படும் இருவர், செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், மராட்டியத்தை சேர்ந்த 21 வயதான காலித் முபாரக் கான் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 வயதான அப்துல்லா என்ற அப்துர் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு பேரும் சட்டவிரோதமாக எல்லையைக் கடப்பதற்கான வழிகளைப் பற்றி பாகிஸ்தானை சேர்ந்த நபரிடம் இருந்து பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 10 தோட்டாக்கள், கத்தி, கம்பி கட்டர் மற்று இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story