நாகாலாந்தில் 2 ஆயுதப்படை வீரர்கள் சுட்டுக் கொலை - சகவீரர் வெறிச்செயல்
நாகாலாந்தில் 2 ஆயுதப்படை வீரர்கள் சகவீரரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கோகிமா,
நாகாலாந்து மாநிலத்தில் நாகாலாந்து ஆர்ம்டு போலீஸ் எனப்படும் ஆயுதப்படைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. பேரென் மாவட்டத்துக்கு உட்பட்ட லம்காய்நம்டி கிராமத்தில் இந்த படைப்பிரிவை சேர்ந்த 2 வீரர்கள், சக வீரரால் 2 நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இறந்த போலீசாரின் பெயர்கள் கெவிசேகோ காடே(34) மற்றும் செவான்பா யிம் (35) என்று தெரியவந்தது. ஜெனிஸ் யோசு என்ற சக வீரர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை நடந்த விசாரணையில் கொலைக்கான காரணம் உறுதியாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story