கல் அறுக்கும் எந்திரத்தை திருடிய 2 பேர் கைது


கல் அறுக்கும் எந்திரத்தை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ட்வால் அருகே கல் அறுக்கும் எந்திரத்தை திருடிய 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு :-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பல்லமஜலு பகுதியை சேர்ந்தவர் வினய்செட்டி. இவர் அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். வினய்செட்டி கல்குவாரியில் உள்ள கல் அறுக்கும் எந்திரத்தை காணவில்லை என பண்ட்வால் போலீசில் கடந்த 12-ந் தேதி புகார் அளித்திருந்தார்.

450 கிலோ எடை கொண்ட கல் அறுக்கும் எந்திரத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருந்தனர். இந்தநிலையில் போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் பெல்தங்கடியை சேர்ந்த ரோஹித் மற்றும் சதீஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் தான் கல்குவாரியில் இருந்த கல் அறுக்கும் எந்திரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்த கல் அறுக்கும் எந்திரம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பண்ட்வால் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story