ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் சாவு


ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் சாவு
x

ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் தாலுகா கோர்தகுந்தா ஏரிப்பகுதியை சேர்ந்தவர் சலீம் உசைன் (வயது 32). இவர் தனது சகோதரரின் மகன் யாசீனுடன் குடிமராமத்து பணிக்கு சென்றார். அவர் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சிறுவன் யாசீன் அருகில் உள்ள ஏரிக்கு தண்ணீர் குடிக்க சென்றான். யாசீன் ஏரியில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி உள்ளே விழுந்தான். இதனால் அவன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். அவனது கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சலீம் உசைன் விரைந்து ஏரியில் குதித்து காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ராய்ச்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story