ஒரே நாளில் 2 இடங்களில் வீடுகளில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் திருட்டு


ஒரே நாளில் 2 இடங்களில் வீடுகளில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் திருட்டு
x

உப்பள்ளியில், ஒரே நாளில் 2 இடங்களில் வீடுகளில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா ஹேமந்த்நகர் பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார். இவர் நேற்றுமுன்தினம் தனது வீட்ைட பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். இதையறிந்த மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைந்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகளை திருடிச்சென்று விட்டனர்.இதையடுத்து வீடு திரும்பிய வினோத்குமார் வீட்டில் இருந்த ரூ.3¼ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருட்டுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கேசுவாப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் உப்பள்ளி தாலுகா உபநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட மிஷின் காம்பவுண்டு அருகே உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் அலமாரியில் இருந்த 71 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

திருட்டுபோன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் உபநகர் போலீசில் புகார் அளித்தார். புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கேசுவாப்பூர், உபநகர் போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story