சிக்னல் கோளாறை சரிசெய்துகொண்டிருந்த ஊழியர்கள் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரெயில் - 2 பேர் பலி


சிக்னல் கோளாறை சரிசெய்துகொண்டிருந்த ஊழியர்கள் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரெயில் - 2 பேர் பலி
x

எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ஜகாங்கிரபாத் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாராபங்கி - கொண்டா இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறை ரெயில்வே ஊழியர்கள் 3 பேர் நேற்று மாலை சரிசெய்துகொண்டிருந்தனர். அப்போது, 2 தண்டவாளங்களிலும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வேகமாக வந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். அப்போது, 3 பேர் மீதும் கொச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.

இதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் அரவிந்த் குமார் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எஞ்சிய 2 ஊழியர்களும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் சோரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story