காஷ்மீரில் போலீஸ் காவலில் இருந்து 2 பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்..!


காஷ்மீரில் போலீஸ் காவலில் இருந்து 2 பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்..!
x
தினத்தந்தி 6 April 2023 9:52 AM IST (Updated: 6 April 2023 10:30 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் போலீஸ் காவலில் இருந்து 2 பயங்கரவாதிகள் தப்பி ஓடினர்.

காஷ்மீர்,

ஜம்மு- காஷ்மீரில் மதுபான கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மரூப் நாசீர், சகீத் சவுகத் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அவர்கள் பாரமுல்லா போலீஸ் காவலில் இருந்து வந்தனர். இந்த இருவரையும் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து பிடித்து இருந்தனர்.

இந்த நிலையில் பாரமுல்லா போலீஸ் காவலில் இருந்து 2 பயங்கரவாதிகளும் தப்பி ஓடினர். அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story