அசாமில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் படுகாயம்


அசாமில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் படுகாயம்
x

கோப்புப்படம்

அசாமில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் போலீசார் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை, காம்தாபூர் விடுதலை அமைப்பு என்ற பயங்கரவாத அமைப்பினரின் இடம்பெயர் முகாம் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. அதில் 6 பயங்கரவாதிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் துப்பாக்கி குண்டுகள் துளைத்து படுகாயம் அடைந்திருந்தனர். தப்பியோடிய மேலும் 2 பயங்கரவாதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பயங்கரவாதிகளின் தற்காலிக முகாமில் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story