'2000 ஆண்டுகள் பழமையான கல்லணை சிறந்த உள்கட்டமைப்பிற்கான உதாரணம்' - பிரதமர் மோடி


2000 ஆண்டுகள் பழமையான கல்லணை சிறந்த உள்கட்டமைப்பிற்கான உதாரணம் - பிரதமர் மோடி
x

தமிழ்நாட்டில் உள்ள கல்லணையை சிறந்த உள்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

புதுடெல்லி,

உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தஆண்டு பட்ஜெட் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது என்றார்.

பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசு கருதுவதாகவும், இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை இந்தியா அடையும் என்றும் அவர் கூறினார்.

மேலும் நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு எப்போதும் முக்கிய தூணாக இருந்து வருவதாகவும், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் சராசரி தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காகி இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள கல்லணையை சிறந்த உள்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்த அவர், இந்த அணை இன்றளவும் இயங்கி வருவது குறித்து மக்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள் என்றார். கல்லணை போன்ற ஒரு பழமையான ஒரு அணை இன்றளவும் அப்பகுதிக்கு வளர்ச்சியை வழங்கி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.


Next Story