ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2017 12:52 PM GMT (Updated: 7 Jun 2017 12:51 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்


ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் மசில் செக்டார் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவவீரர்கள் பதில் தாக்குதலை தொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பாதுகாப்புபடை வீரர்கள் சுட்டதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்ற பயங்கரவாதிகள் தாக்குதலை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Next Story