குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பேச்சு


குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பேச்சு
x
தினத்தந்தி 12 Jun 2017 3:50 PM GMT (Updated: 12 Jun 2017 3:50 PM GMT)

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பேச எதிர்க்கட்சிகள் புதன் அன்று கூடிப் பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி

இது தொடர்பாக 10 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கேயும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ஷரத் யாதவ்வும், ஆர் ஜே டி சார்பில் லாலுவும், மார்க்சிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரியும் இடம் பெற்றுள்ளனர். தவிர திமுகவின் சார்பில் ஆர் எஸ் பாரதி, சமஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ் , பகுஜன் சமாஜ் சார்பில் எஸ் சி மிஸ்ரா, திரிணமுல் சார்பில் டெரிக் ஓ பிரியன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரஃபுல் படேல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இதே போல பாஜக சார்பில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி மற்றும் வெங்கய்யா நாயுடு ஆகியோரை தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் தங்களது வேட்பாளரை ஆளுங்கட்சி அறிவித்தப் பின்னரே அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வானால் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்த வேண்டியிருக்காது. ஆளுங்கட்சி இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகளுடனும் பேசவில்லை. எனவே எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சி மதச்சார்பற்ற ஒருவரை பொது வேட்பாளராக முன்வைக்காவிட்டால் தங்களது வேட்பாளரை அறிவிக்க முடிவு செய்துள்ளன. 

இப்போதுள்ள சூழ்நிலையின்படி பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

எனவே எதிர்க்கட்சிகள் பலரது பெயர்களை பரிசீலித்து வருகின்றனர். இதில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, சரத் பவார், முன்னாள் சபாநாயகர் மீரா குமார் உட்பட பலரும் பட்டியலில் உள்ளனர். 


Next Story