பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 12-ல் துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என தகவல்


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 12-ல் துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2017 9:46 AM GMT (Updated: 13 Jun 2017 9:46 AM GMT)

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 12-ல் துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 12 -ல் துவங்கி  ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.  மழைக்கால கூட்டத்தொடரில் மாட்டிறைச்சி விவகாரம், ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதன்காரணமாக மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Next Story