கோவா: ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கு திக்விஜய்சிங்கே காரணம் - மாநில காங்கிரஸ்
மாநில பேரவைத் தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கு பொறுப்பாளர் திக்விஜய்சிங்கே காரணம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
பனாஜி
தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்க உரிமைக்கோர முடிவு செய்த போது அதிக இடங்களை பெற்ற கட்சி என்பதால் ஆளுநரே அழைப்பார் என்று கூறி தடுத்தார். இதனால் ஆதரவு தருவதாக பேசி கோவா முன்னேற்றக் கட்சி தலைவர்கள் பேசி வந்த நேரத்தில் அக்கட்சி உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். திக்விஜய்சிங் கூறிவந்தது போல நடக்கவில்லை என்று அக்கட்சி எழுதிய கடிதம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அரசியலில் எவ்வாறு போட்டியை எதிர்கொண்டு ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதை கட்சி கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநில கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பெரிய கூட்டணி ஒன்றிற்கு கோவா காங்கிரஸ் முயலவில்லை. ஆனால் அவ்வாறு முயன்றது தவறு என்பதை திக்விஜய்சிங் பின்னர் ஒப்புக்கொண்டார்.
கோவாவில் 17 இடங்களை காங்கிரஸ் பெற்றிருந்தாலும் 13 இடங்களை வென்ற பாஜக எம் ஜி பி, கோவா முன்னேற்றக்கட்சி மற்றும் சுயேட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
Related Tags :
Next Story