ஜிஎஸ்டிக்கு முன்னரே தங்கத்தை வாங்கிக் குவித்த இந்தியர்கள்


ஜிஎஸ்டிக்கு முன்னரே தங்கத்தை வாங்கிக் குவித்த இந்தியர்கள்
x
தினத்தந்தி 11 July 2017 5:11 PM IST (Updated: 11 July 2017 5:11 PM IST)
t-max-icont-min-icon

ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகமாகவுள்ள நிலையில் ஜூன் மாதமே சாதனை அளவாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை

ஜூன் மாதத்தில் இறக்குமதியான தங்கத்தின் அளவு கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு 22.7 டன்களாக இருந்திருக்க ஜூன் மாதத்தில் 75 டன்களாக இருந்துள்ளது.  இவ்வாண்டு முதல் ஆறு மாதத்தில் 514 டன்கள் தங்கம் இறக்குமதியாகியுள்ளது; இது கடந்த ஆண்டை விட 161 விழுக்காடு அதிகமாகும்.

எனினும் ஜூலை மாதத்தில் தங்கம் இறக்குமதி குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் திருமண போன்ற சுபநிகழ்ச்சிகள் குறைவாகவே இருக்கும் அது மட்டுமின்றி நடவு மாதமாக இருப்பதால் கிராமப்புறங்களில் தங்கம் வாங்குவது குறைவாகவே இருக்கும். 

கிராமப்புறங்களில் தங்கம் ஒரு முக்கிய கையிருப்பு சொத்து. அவை இந்தியாவின் மூன்றில் இரு பங்கு தங்கத்தை நுகர்கின்றன. 

ஜூலையில் 35 டன்னிற்கும் குறைவாக தங்கம் இறக்குமதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய மக்கள் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரி 3 சதவீதமாக அதிகரிக்கும் என்பதால் மக்கள் ஜூன் மாதத்திலேயே தேவையான தங்கத்தை வாங்கியுள்ளனர். அம்மாதத்தில் தங்கத்தின் மீதான வரி 1.2 சதவீதமாக இருந்தது.  


Next Story